8 ஆண்டாக கால்நடை காப்பீடு கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை
திருவாடானை: தொண்டி அருகே வட்டாணம் கிராமத்தில் ஆறு பசுமாடுகள் இறந்ததற்கு எட்டு ஆண்டுகள் ஆகியும் காப்பீடு தொகை கிடைக்கததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தொண்டி அருகே வட்டாணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி, செபஸ்தியான், முத்துகுமார், சரிதா, சுரேஷ், பிரபு. மாடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்களின் பசுமாடுகள் நோய் பாதிப்பால் 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தன. கால்நடை டாக்டரால் உடல் பரிசோதனை செய்யபட்டு மாடுகள் புதைக்கப்பட்டன.
அரசின் கால்நடை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்தனர். காப்பீடு தொகை விரைவில் கிடைக்கும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் எட்டு ஆண்டுகள் ஆகியும் காப்பீடு தொகை கிடைக்கவில்லை. இது குறித்து சுப்பிரமணி, சுரேஷ் கூறியதாவது:
காப்பீடு தொகை கிடைக்காதது குறித்து ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநருக்கு மனு அனுப்பினோம். அங்கிருந்து பிப்.2 ல் பதில் வந்தது. அதில் 2016-17 ல் கால்நடை காப்பீடு திட்டத்தில் மதுரை நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகள் இறந்ததற்கான பிரேத பரிசோதனை அறிக்கை கடிதம் காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் காப்பீடு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த விபரத்தை காப்பீடு நிறுவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம்.
காப்பீடு நிறுவனத்தில் இருந்து விபரங்கள் பெறப்பட்டவுடன் தெரிவிக்கப்படும் என்று பதில் கடிதம் வந்துள்ளது.எட்டு ஆண்டுகள் ஆகியும் காப்பீடு கிடைக்காதது கவலையாக உள்ளது. ஆகவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்