மாவட்ட கோர்ட் வக்கீல் சங்க தேர்தல்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த சங்கத்தின் நிர்வாகிகள் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நடந்தது. இதில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகள் தவிர மற்ற நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, நேற்று காலை சங்க அலுவலகத்தில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் தலைவர் பதவிக்கான தேர்தலில் உதயசூரியன், 69 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்.

துணை தலைவர் பதவிக்கு சத்தியமூர்த்தி, 55 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். புதிய நிர்வாகிகளுக்கு தேர்தல் அலுவலர் குமரன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement