நொய்யலாற்று விளைநிலங்களில் பாதிப்பு இழப்பீட்டுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
கோவை : நொய்யலில் சாயக்கழிவுகளும், தொழிற்சாலை கழிவுகளும் கலப்பதால், அதன் வழித்தட விளைநிலங்களின் தன்மை கெட்டுவிட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று, நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை கலெக்டரிடம், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திருஞானசம்பந்தன் அளித்த மனு:
நொய்யல் ஆற்றில் சாய, மருத்துவ, தொழிற்சாலை, அடுக்குமாடி குடியிருப்பு, உள்ளாட்சி அமைப்பு கழிவுகள் கலந்து வருவதால், நொய்யல் படுகையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வரை விளைநிலங்களின் தன்மை கெட்டுவிட்டது.
நீர் ஆதாரங்கள் மாசடைந்து, விவசாயிகள், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து, கேன்சர் நோய் தாக்குதலும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அதனால், மாசுபட்ட நீரை நொய்யல் ஆற்றில் விடாமல், தடுத்து நிறுத்தி சுத்திகரிப்பு செய்ய வேண்டும். நொய்யல் படுகையோரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் வகையில் உள்ள தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாயப்பட்டறைகள், மருத்துவமனைகளுக்கு, தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்