போதை பயன்பாடு தடுக்க ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று, அன்னுார் சாலையில் உள்ள தனியார் கல்லுாரி மாணவர்கள் மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார் இணைந்து, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது குறித்தும், அதன் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் 'say no to drugs' என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்.

----

Advertisement