இல்லத்தை சுற்றி கழிவு நீர் போலீசார் குடும்பம் குமுறல்

சிவகங்கை: சிவகங்கையில் போலீசாருக்காக உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளை சுற்றிலும் கழிவு நீர் தேங்கியிருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக போலீசாரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் சார்பில் போலீசாருக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.44 கோடியில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்களுக்கு 17 வீடுகள், போலீசாருக்கு 123 வீடுகள் என மொத்தம் 140 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

100க்கும் மேற்பட்ட வீடுகளை போலீசார் வாங்கி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர்.

இந்த குடியிருப்பை சுற்றிலும் முறையான சுற்றுச் சுவர் கிடையாது. வீடுகளை சுற்றிலும் அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசு தொல்லை ஏற்பட்டு நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement