விசைத்தறி பிரச்னைக்கு தீர்வு காண ஜவுளித்துறை செயலரிடம் மனு

கருமத்தம்பட்டி : விசைத்தறி மற்றும் ஜவுளி தொழில் நெருக்கடிகளை களைய கோரி, மத்திய ஜவுளித்துறை செயலாளரிடம் பா.ஜ., நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், விசைத்தறி மற்றும் ஜவுளி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை களைய கோரி, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் மோகன் மந்திராஜலம், பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி, பரமசிவன், வடக்கு ஒன்றிய தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கின் முகாம் அலுவலகத்தில், ஜவுளி துறை செயலாளரிடம் மனு அளித்தனர்.

விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கும் வகையில், சிறப்பு சூரிய ஒளி மின் திட்டத்தை மானியத்துடன் அமல்படுத்த வேண்டும், ஜவுளி துறையில் உள்ள நெருக்கடிக்கு தீர்வு காண சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement