செப்டிக் டேங்க் சுத்தம் செய்யாமல் கைவிரித்த வீட்டு வசதி வாரியம்

பல்லடம்: பல்லடம் அருகே, அறிவொளி நகர் குடியிருப்பு பகுதியில், செப்டிக் டேங்க் நிரம்பிய நிலையில், வீட்டு வசதி வாரியம் கைவிரித்ததால், பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பல்லடத்தை அடுத்த, அறிவொளி நகரில், வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, 544 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், 350க்கும் அதிகமான குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள செப்டிக் டேங்க் நிரம்பிய நிலையில், கழிவுகளை அகற்ற வேண்டி, வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். பணம் செலவாகும் என்று கூறி அதிகாரிகள் கைவிரித்ததாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த, 2015ம் ஆண்டு முதல் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம். இங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. சுகாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையே, இங்குள்ள செப்டிக் டேங்க் நிரம்பி இரண்டு நாட்கள் ஆகின்றது. இது குறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினோம். ஆய்வு செய்த அதிகாரிகள், சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் சிலரை வரவழைத்தனர். மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக்கூடாது என்ற கோர்ட் உத்தரவு உள்ளதை அதிகாரிகளுக்கு நினைவுபடுத்தினோம்.
இதனையடுத்து, கழிவுகள் அகற்றும் முயற்சியை கைவிட்ட அதிகாரிகள், வாகனத்தின் உதவியுடன் கழிவுகளை அகற்ற, 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். இத்தொகையை வைத்திருந்தால் கூறுங்கள், கழிவுகளை அகற்றித் தருகிறோம் என்று கூறி சென்றனர்.
குடியிருப்பில் உள்ளவர்கள், அன்றாடம் வேலைக்கு சென்றால்தான், குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இச்சூழலில், இங்குள்ளவர்கள் பணம் செலவு செய்வது இயலாத காரியம். ஊராட்சியும் கண்டுகொள்ளாத நிலையில், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளும் கைவிரித்ததால், துர்நாற்றத்துக்கு இடையே வாழ்ந்து வருகிறோம். மக்களின் நலன் கருதாத, அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்