ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., வேண்டுகோள்

திருப்பூர், : திருப்பூர் பிளாட்பார்ம் மேற்கூரைகளை புதிதாக மாற்றிக்கொடுக்க வேண்டுமென, எம்.பி., கோரிக்கைவிடுத்துள்ளார். திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ரயில்வே அமைச்சரை சந்தித்து, திருப்பூர் தொடர்பான கோரிக்கைகளை நேற்று முன்வைத்துள்ளார். நாகப்பட்டினம் தொகுதி எம்.பி., செல்வராஜூடன் சென்று, கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.பி., அளித்த கடிதத்தில்,' திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த வேண்டும். இரண்டு 'பிளாட்பார்ம்' மேற்கூரைகள் ஏற்கனவே பழுதடைந்துள்ளன. மோசமான நிலையில் உள்ள மேற்கூரைகளை மாற்றி கொடுக்க வேண்டும். ஏற்கனவே கோரிக்கை விடுத்தபடி, ஈரோடு மாவட்டத்தில் இரண்டு புதிய ரயில்வே திட்டங்களை செயல் படுத்த வேண்டும்,' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement