'உரிய சான்றிதழ்கள் இருந்தால் வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும்'

வழிகாட்டி நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி விருதாச்சலம் பேசியதாவது:
மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள வித்யாலட்சுமி போர்டல் வாயிலாக, மாணவர்கள் எளிதாக கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கலை, அறிவியல், மருத்துவம், இன்ஜினியரிங் என உரிய அங்கீகாரம் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கல்விக்கடன் பெறமுடியும். கல்விக்கட்டணம் மட்டுமின்றி, லேப்டாப், கம்ப்யூட்டர், புத்தகம் உட்பட அனைத்து செலவுகளுக்கும் கடன் பெறமுடியும்.
கல்விக்கடன், ரூ.4 லட்சம் வரை வங்கிகள் கொடுத்துவிடும். ரூ.4 லட்சத்திற்கு மேல் இருப்பின், 5 சதவீதம் பெற்றோர் பங்களிப்பு அவசியம். அதுவும், ரூ.7.50 லட்சம் வரை கடன் பெற எவ்வித செக்யூரிட்டியும் அவசியம் இல்லை. பெற்றோர், மாணவர்கள் கையெழுத்து போதும். அதற்கு மேல் செக்யூரிட்டி அவசியம்.
பெற்றோரின் ஆண்டு வருமானம், 4.5 சதவீதத்திற்குள் இருந்தால் 'புரபஷனல்' பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் மொத்த வட்டியையும், மத்திய அரசு செலுத்திவிடும். படிப்பு முடிந்த பின் ஓராண்டு வரை, கடனை திரும்ப செலுத்த அவகாசம் அளிக்கப்படும்.
மாணவர்களின் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், அட்மிஷன் கடிதம், கட்டண விபர சான்று, பான் கார்டு, ஆதார் அட்டை, தாய் அல்லது தந்தை வருமானச்சான்று, தொழில் செய்பவர்கள் எனில் அதுசார்ந்த சான்று சமர்ப்பித்தால் போதுமானது. உரிய சான்றிதழ்களுடன் சென்றால் கல்விக்கடன் பெறுவது எளிது.
இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்