புது பஸ் ஸ்டாண்டில் செயல்படாத புதன்கிழமை சந்தை

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் துவங்கப்பட்ட புதன் கிழமை சந்தை துவங்கிய முதல் இரு வாரங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், அதற்கு பின் செயல்படவே இல்லை.

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் 2024 ஆக.21 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கு பின் பஸ்களை கொண்டு வர வழித்தடங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

நகராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதல் முனைப்பாக புதன்கிழமை தோறும் சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. துவங்கிய முதல் இருவாரங்களில் மட்டும் இங்கு செயல்பட்ட சந்தை அதற்கு பின் செயல்படவே இல்லை.

புது பஸ் ஸ்டாண்டில்பஸ் ஏறி செல்வோருக்குபயன்படும் வகையில் தான் இந்த சந்தை கொண்டு வரப்பட்டது. தற்போது செயல்படாமல் உள்ளது.

இதே போன்றதொரு காய்கறி சந்தைகள் மகப்பேறு மருத்துவமனை எதிர்ப்புறம் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இது காலை, மாலை நேரங்களில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது.

Advertisement