வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளலாம்: வெளியானது புதிய அப்டேட்!

1


புதுடில்லி: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளும் வகையில் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

கோடிக்கணக்கான பயனர்களை தன் வசம் ஆக்கி, சமூக வலைதளத்தில் வாட்ஸ் அப் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப பயனர்களை குஷிப்படுத்தும் வகையில், வாட்ஸ் அப் நிறுவனம் புது புது அப்டேட்களை செய்து கொண்டு வருகிறது.



குறிப்பாக, வீடியோ கால், ஆடியோ கால், குரூப் வீடியோ கால் என்று ஏராளமாக வசதிகளை பயனர்களுக்கு செய்து கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் ஆப்ஷன் ஒன்று இருக்கிறது. அதுதான் அனைவரும் விரும்புவது ஆகும்.


ஒரு ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, நமது "காண்டக்ட்" லிஸ்டில் உள்ளவர்கள் எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்று பார்க்கலாம். இதுதான் இந்த ஸ்டேட்டஸின் சிறப்பு. அதில் ஒரு அப்டேட் செய்து, பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் குஷிப்படுத்தி உள்ளது.


இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ்-அப் ஸ்டேட்டசிலும் பாடல்களை வைக்கும் வகையில் மெட்டா புதிய அப்டேட் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரட்ஸ் ஆகிய மூன்று சமூக வலைதளங்களையும் வாட்ஸ்அப்பில் இருந்தபடியே இயக்கும் அப்டேட் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement