கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது


குமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், நேற்று மதியம், 12:00 மணிக்கு அப்பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ராஜம் தியேட்டர் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த நபரை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தங்கமணி, 55, என்பதும், இவர் சட்டத்துக்கு விரோதமாக தடை செய்யப்பட் போதைப்பொருளான கஞ்சாவை விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement