ஜவுளிக்கடை உரிமையாளர்சாலை விபத்தில் உயிரிழப்பு

ஜவுளிக்கடை உரிமையாளர்சாலை விபத்தில் உயிரிழப்பு


ப.வேலுார்:நாமக்கல், ப.வேலுாரை சேர்ந்தவர் சரவணன், 56; ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 'எக்ஸல் சூப்பர்' மொபட்டில், பள்ளி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை சுவரில் மோதி மயங்கினார்.
அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்த சரவணன், தன், 56வது பிறந்தநாளை, கடந்த, இரு தினங்களுக்கு முன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement