4 நாட்களாக நீடித்த எல்.பி.ஜி., காஸ் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை: கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்த நிலையில், 4 நாட்களாக நீடித்து வந்த எல்.பி.ஜி., காஸ் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் டெண்டர் பெற்று காஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன.
வரும் 2025- 30ம் ஆண்டுகளுக்கான டெண்டரில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் சிலவற்றை லாரி உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
நிபந்தனைகளை வாபஸ் கோரி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தமும் தொடங்கினர். இதனால் தென் மாநிலங்களில் அமைந்துள்ள பாட்டிலிங் நிலையங்களுக்கு சமையல் காஸ் லோடு கொண்டு செல்லும் பணி 4 நாட்களாக தடைபட்டது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 1,000 லாரிகள் முதல், 1,500 லாரிகள் வரை காஸ் ஏற்றவில்லை. வேலைநிறுத்த போராட்டத்தால், நாளொன்றுக்கு, மூன்று கோடி ரூபாய் வீதம், நான்கு நாட்களில், 12 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஆயில் நிறுவன அதிகாரிகளிடம், லாரி உரிமையாளர்கள் பேச்சு நடத்தினர்.
இதில் டெண்டர் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்த நிலையில், 4 நாட்களாக நீடித்து வந்த எல்.பி.ஜி., காஸ் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது
-
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்
-
சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு