நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்

24


லக்னோ: '' நான் ஒரு யோகி. அரசியல் எனது முழு நேர வேலை அல்ல ,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.



இது தொடர்பாக பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளித்தார்.


அப்போது அவரிடம், பிரதமர் பதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு யோகி ஆதித்யநாத் கூறியதாவது; நான் உ.பி., மாநில முதல்வர். மாநில மக்களுக்காக கட்சி என்னை நியமித்து உள்ளது. அரசியல் எனது முழு நேர வேலையல்ல.தற்போது இங்கு நான் பணியாற்றி கொண்டு உள்ளேன். ஆனால், உண்மையில் நான் ஒரு யோகி. எவ்வளவு காலம் இங்கு இருந்து நாங்கள் பணியாற்றினாலும், அதற்கு என காலக்கெடு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.



கட்சி மேலிடத்துடன் கருத்து வேறுபாடா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில், ' கட்சி காரணமாக இந்த பதவிக்கு நான் வந்துள்ளேன். அப்படி இருக்கையில் எப்படி கருத்து வேறுபாடு இருக்க முடியும். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். கருத்து வேறுபாடு இருந்தால் இப்பதவியில் நான் எப்படி தொடர முடியும் என யோகி ஆதித்யநாத் கூறினார்.


மேலும் புல்டோசர் நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு அவர் கூறுகையில், ' இது சாதனை அல்ல. உ.பி.,க்கு அது தேவைப்படுகிறது. இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது என நாங்கள் நினைக்கிறோம். ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை அகற்ற புல்டோசர் பயன்படுத்தப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் புல்டோசர் பயன்படுகிறது. இதனை எப்படி சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என நாங்கள் கற்றுக் கொடுத்து உள்ளோம்,' என அவர் தெரிவித்தார்.

Advertisement