30 டன் நிவாரண பொருட்களுடன் மியான்மர் கிளம்பியது இந்தியக் கப்பல்


புதுடில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மியான்மருக்கு 30 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய போர்க்கப்பல் கிளம்பியது.


இந்நிலையில், மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, நேற்று முன்தினம், 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.


Tamil News
Tamil News
Tamil News
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.


வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஐ நெருங்கி உள்ளது.


நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள மியான்மருக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன. அந்த நாட்டிற்கு நம் நாடும் ' ஆப்பரேஷன் பிரம்மா' என்ற பெயரில் உதவியை துவக்கி உள்ளது. நேற்று, , தற்காலிக கூடார துணிகள்,படுக்கை விரிப்புகள், போர்வைகள், பிரட் உள்ளிட்ட உணவு பொருட்கள், சோலார் விளக்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஜெனரேட்டர் செட்டுகள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவை 'சி130 ஜெ' விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.


இந்நிலையில், ஐஎன்எஸ் கார்முக் மற்றும் எல்சியு 52 கப்பல்கள் மூலம் நிவாரண பொருட்கள் மியான்மருக்கு விரைந்து உள்ளன.


இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்பரேஷன் பிரம்மா தொடர்கிறது. 30 டன் நிவாரணம் மற்றும் மருந்து பொருட்களுடன் ஐஎன்எஸ் கார்முக் மற்றும் எல்சியு 52 ஆகிய கப்பல்கள் மியான்மரின் யாங்கூன் நோக்கி விரைந்துள்ளன. இவ்வாறு அதில் பதிவிட்டு உள்ளார்.

Advertisement