1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 7ல் ஆண்டு இறுதி தேர்வு
சென்னை: தொடக்க கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வரும் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை, ஆண்டு இறுதி தேர்வுகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், தேர்வை முன்கூட்டியே நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வரும் 7ம் தேதி முதல், 17ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
புதிய தேர்வு அட்டவணையின்படி, 7 முதல் 11ம் தேதி வரை, தமிழ், விருப்ப மொழி, ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும்.
நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு, 15ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட பகீர் அறிவிப்பு
-
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
Advertisement
Advertisement