மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி

11

புதுடில்லி : கடந்த மார்ச் மாதம் ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மார்ச் மாதம் ரூ.1.96 லட்சம் கோடி கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் 9.9 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த பிப்., மாதத்தை விட 6.8 சதவீதம் கூடுதல் வசூல் ஆகி உள்ளது.


இதில் சிஜிஎஸ்டி- 38,100 கோடி

எஸ்ஜிஎஸ்டி ரூ.48,900 கோடி

ஐஜிஎஸ்டி ரூ.95,900

செஸ் வரிமூலம் ரூ.12,300 கோடி வசூல் ஆகி உள்ளது.


முன்னதாக
கடந்த பிப்., மாதம் ஜிஎஸ்டி ரூ.1,83,646 கோடியும்,
ஜன., மாதம் ரூ.1.96 லட்சம் கோடியும் வசூல் ஆகி இருந்தது எனக்கூறப்பட்டு உள்ளது.

Advertisement