திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்

காரைக்கால்: புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னிதியில் அனுக்கிரஹ மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெர்ச்சி விழா மிக விமரிசையாக நடக்கும்.

நேற்று முன்தினம், 29ம் தேதி சனி பெயர்ச்சி நடைபெறும் என, தகவல் பரவியது. இதுக்குறித்து கோவில் நிர்வாகம், 'வாக்கிய பஞ்சாங்கம்' முறையை பின்பற்றி பாரம்பரிய கணிப்பு முறையின்படி வரும் 2026ம் ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என, தெரிவித்தது.

சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் முறைப்படி சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலுக்கு சென்னை, சேலம், திருச்சி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் வருகை புரிந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் நான்கு மணி நேரம் காத்திருந்து சனி பகவானை தரிசனம் செய்தனர்.

Advertisement