மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் பனிப்பொழிவும், பகலில் கடும் வெயில் தாக்கமும் உள்ளது. நேற்று காலை மாவட்டத்தில் கடும் மூடுபனி காணப்பட்டது. சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.
பனிப்பொழிவு காலை 9:00 மணி வரை நீடித்தது. அதே வேளையில் பகலில் கடும் வெயில் தாக்கம் ஏற்பட்டது. கடலுார் பகுதியில் 94 டிகிரியாக வெப்பம் இருந்தாலும் காற்றின் வேகம் குறைந்ததால் வெப்பம் அதிகம் போல் உணரப்பட்டது.
வெயில் தாக்கத்தால் காலை 11:00 மணிக்கு பின்னர் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயில் தாக்கத்தை தணிக்க பழச்சாறு, தர்பூசணி, கரும்பு சாறு, இளநீர், குளிர்பானங்களை குடிக்கின்றனர்.
சாலையோர பழச்சாறு, கடைகள், குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. விருத்தாசலம் பகுதியில் நேற்று அதிகாலை வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. காலை 8:30 மணி வரை எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு இருந்தது.
மேலும்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்
-
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
வக்ப் மசோதாவை ஆதரித்த முஸ்லிம் நபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
-
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
கர்நாடக அரசு தீவிரம்: மேகதாது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
-
பைக்கில் மறைந்திருந்த பாம்பு கடித்து இளைஞர் பலி