அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ஊராட்சி அள்ளூரில் கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன் தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முருகுமணி, மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன், துணை செயலாளர் வீரமூர்த்தி, விவசாய அணி தலைவர் சரவணன், கோவிராசங்கம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன், தகவல் தொழிநுட்ப பிரிவு துணை செயலாளர் கிருபாகரன் ஆகியோர் பூத் கமிட்டி பட்டியலை ஆய்வு செய்தனர்.
பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் தலைமையில் 25 பேர் அ.தி.மு.க., வில் இணைந்தனர். எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வி, ஒன்றிய துணை செயலாளர் சுனிதாபாரதி, அரங்கப்பன், ரவி பங்கேற்றனர்.
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழப்பு
-
அகழாய்வில் கிடைத்தது அஞ்சனக்கோல்; சிறப்புகள் ஏராளம்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமெரிக்க வாகன உதிரி பாகங்கள் மீது 25 சதவீத வரி விதிப்பு: கனடா பதிலடி
-
சாலை விபத்தில் சிறுவன் பலி பைக் கொடுத்த மாமன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
-
மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது