மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மொபட்டில் மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று மதுரபாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பின்பக்க இருக்கைக்கு கீழே புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி கடத்தியது தெரியவந்தது.

உடன், 88 மது பாட்டில்கள் கடத்தி வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த நாகராஜ், 45; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மொபட் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement