அமெரிக்க வாகன உதிரி பாகங்கள் மீது 25 சதவீத வரி விதிப்பு: கனடா பதிலடி

ஒட்டாவா: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாக கனடா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்துள்ளார். ஆனால் கனடா மற்றும் மெக்சிகோவிற்கு புதிய வர்த்தக வரிகளைச் சேர்க்கவில்லை. இருப்பினும், கனடாவின் எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது 25 சதவீத வரிகளை டிரம்ப் விதித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாக கனடா தெரிவித்துள்ளது.இது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகன உதிரி பாகங்களுக்கு 25% வரி விதிக்கப்படுகிறது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக வர்த்தகத்திற்கு ஒரு சோகம்.
தங்கள் சொந்த மக்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க நிர்வாகம் வரி விதிப்பு முடிவை மாற்ற வேண்டும். அமெரிக்கா அணுகுமுறையை மாற்ற நீண்ட காலம் ஆகலாம். இவ்வாறு அவர் கூறனார். டிரம்பின் புதிய வரிகள் சந்தைகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
அமெரிக்காவின் புதிய வரி உயர்வு:பின்னலாடை ஏற்றுமதி பிரகாசிக்க வாய்ப்பு
-
உத்திரமேரூரில் புறவழிச்சாலை பணி மந்தம் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி
-
சமூக வலைதளத்தை குழந்தைகள் பயன்படுத்த தடை கேட்ட மனு தள்ளுபடி
-
ஓய்வூதியர் அமைப்பினர் காஞ்சியில் ஆர்பாட்டம்
-
மாவட்ட தொழில் மையங்களில் பொது மேலாளர் பணியிடங்கள் காலி தமிழகத்தில் திட்டப்பணிகள் பாதிப்பு
-
பராமரிப்பு இல்லாத அரசு பேருந்துகள் தடம் எண் தெரியாமல் பயணியர் தவிப்பு