அகழாய்வில் கிடைத்தது அஞ்சனக்கோல்; சிறப்புகள் ஏராளம்!

சென்னை: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில், செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக்கோல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில், இதுவரை, உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை என 1,350க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக்கோல் கிடைத்துள்ளது.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வில், 13 சென்டிமீட்டர் ஆழத்தில் 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட அஞ்சனக்கோல் கிடைத்துள்ளது.
பண்டையத் தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறையையும், அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியதையும் இக்கண்டுபிடிப்புகள் உலகிற்குப் பறைசாற்றுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
உத்திரமேரூரில் புறவழிச்சாலை பணி மந்தம் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி
-
சமூக வலைதளத்தை குழந்தைகள் பயன்படுத்த தடை கேட்ட மனு தள்ளுபடி
-
ஓய்வூதியர் அமைப்பினர் காஞ்சியில் ஆர்பாட்டம்
-
மாவட்ட தொழில் மையங்களில் பொது மேலாளர் பணியிடங்கள் காலி தமிழகத்தில் திட்டப்பணிகள் பாதிப்பு
-
பராமரிப்பு இல்லாத அரசு பேருந்துகள் தடம் எண் தெரியாமல் பயணியர் தவிப்பு
-
தொழிலதிபர்களை அரசியல்வாதிகளாக்க மன்மோகன் சிங் பெயரில் புதிய திட்டம்