மாணவர்களுக்கு பட்டமளிப்பு

திண்டுக்கல் : அக் ஷயா வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. தர்ஷினி மருத்துவமனை மருத்துவர் பாலசுந்தரி பங்கேற்றார். பள்ளி தாளாளர் பழனிசாமி, சந்திராயன் ஐ.ஏ.எஸ் அகாடமி தாளாளர் சுகுமாறன், பள்ளி தலைமையாசிரியர் வேணுகோபால், நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் கோபால் பங்கேற்றனர். மாணவர்களின் 2 பெற்றோரை தேர்வு செய்து கவுரவிக்கப்பட்டனர். கலைநிகழ்ச்சிகளும், பட்டமளிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

Advertisement