முதியோர் இலவச பயணச்சீட்டு அட்டை அதிகரிக்க கோரிக்கை

குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில், சில நாட்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழக அரசு வழங்கும் முதியோர் இலவச பயணச்சீட்டு அட்டைகள், 10 மட்டுமே வழங்கப்படுகின்றன.

மருத்துவமனை, கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, இது போதுமானதாக இல்லை. அதனால், பயணச்சீட்டு அட்டையை, 15 ஆக உயர்த்த வேண்டும்.

அரசு பேருந்துகளில், முதியோருக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் மற்றவர்கள் அமருவதை தடுத்து, முதியோர் அமருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு வழங்கி வரும் பென்ஷன் தொகையான 1,200 ரூபாயை, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement