துாண்டல் கூட்டம்  திண்டுக்கல்

திண்டுக்கல்: இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை., கல்வி மையம் - 43080, ஜி.டி.என் கலைக்கல்லுாரி சார்பாக புதிய மாணவர்களுக்கான துாண்டல் கூட்டம் நடந்தது. இக்னோ 43080 கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் அருண் வரவேற்றார். மதுரை மண்டல இக்னோ இயக்குனர் சண்முகம் பங்கேற்று இக்னோ சம்மந்தமான விழிப்புணர்வு ,வழிகாட்டுதல்களை வழங்கினார். கலைக்கல்லுாரி முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பாண்டியராஜன் உணவு, ஊட்டச்சத்து சம்மந்தமான விழிப்புணர்வுகளை வழங்கினார். இக்னோ கல்வி மையத்தின் கல்வி ஆலோசகர் மதிவாணன் பேசினார். துணை ஒருங்கிணைப்பாளர் மணிமகேஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement