பள்ளியில் மருத்துவ முகாம்

கடலுார் : பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

வடகுத்து ரோட்டரி சங்கம், பசுமைத் தாயகம், புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ரோட்டரி சங்க தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.

முதன்மை சிறப்பு விருந்தினர் ரோட்டரி சங்க சாசன தலைவர் ஜெகன், குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.

விழாவில், ஒன்றிய செயல0ாளர் அருணகிரி, ஒன்றிய தலைவர் விஜயகுமார், எழில்குமார், மனோஜ், ராஜசேகர், ரஞ்சித், துரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement