இலக்கை தாண்டி ஐ.சி.எப்., 3,007 பெட்டிகள் தயாரிப்பு

சென்னை, சென்னை ஐ.சி.எப்., ஆலையில், 2024-25ம் நிதி ஆண்டில், 3,007 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், 2023-24ம் ஆம் நிதி ஆண்டில், 2,829 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. கடந்த 2024- 25ம் நிதியாண்டில், 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதை தாண்டி, 3,007 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த நிதியாண்டில், 3,007 ரயில் பெட்டிகள் தயாரிப்பின் வாயிலாக, ரயில் பெட்டிகள் உற்பத்தியில், முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.

இதில், 12 பெட்டிகள் கொண்ட நமோ பாரத் ரேபிட் ரயில் தயாரிப்பு, 21 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு, அம்ரித் பாரத் 2.0 ரயில்கள் தயாரிப்பு உள்ளிட்டவை, கடந்த நிதியாண்டின் சிறப்பம்சம்.

இதைத்தொடர்ந்து, ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணியை விரைவில் முடிக்க உள்ளோம்..

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில் பெட்டிகள் தயாரிப்பில் உறுதுணையாக இருந்த அதிகாரிகள், ஊழியர்களை, ஐ.சி.எப்., பொதுமேலாளர் சுப்பாராவ் பாராட்டி, இனிப்பு வழங்கினார்.

Advertisement