பெண்ணிடம் வம்பு செய்த இருவர் கைது

புளியந்தோப்பு, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அம்மு என்கிற பாக்யலட்சுமி, 31. இவர், கடந்த 30ம் தேதி இரவு 9:00 மணியளவில், வீட்டின் வெளியே நின்றபோது, அவ்வழியாக வந்த மூவர் மது போதையில் பாக்யலட்சுமி மீது சிகரெட் புகையை ஊதியுள்ளனர்.

தட்டிக்கேட்ட பாக்யலட்சுமியை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார் புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற கருப்பா மணி, 36, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 24, ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மணிமாறன் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement