ரூ.24 லட்சம் கையாடல் 'பங்க்' மேனேஜர் கைது

திரு.வி.க., நகர்,
வியாசர்பாடி, பாலமுருகன் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவர், வியாசர்பாடி அடுத்த மேல்பட்டி பொன்னப்பன் தெருவில், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு, பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன், 27, மேனேஜராக பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த ஆண்டு, ஜூலை முதல் அக்டோபர் வரை வசூல் செய்த பணத்தை, சரிவர வங்கியில் செலுத்தாமல், 24 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, புளியந்தோப்பு துணை கமிஷனரிடம், முனியாண்டி புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கையாடல் செய்த பணத்தை திருப்பி தருவதாக கூறிய கார்த்திகேயன், 9 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்து, மீதி பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதையடுத்து, திரு.வி.க., நகர் போலீசார், நேற்று கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement