காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்ல தேடுதல் வேட்டை

4

ஜம்மு :ஜம்மு -- காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து கடந்த மாதம் ஒரு பயங்கரவாதிகள் குழு ஊடுருவியது.

மார்ச் 23ல் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே முதல் மோதல் நடந்தது. இதில் தாக்குப்பிடிக்க முடியாமல் பயங்கரவாதிகள் அனைவரும் தப்பி ஓடினர்.

அவர்களை தேடும் பணி நடந்து வந்தது. கடந்த 28ம் தேதி கதுவாவின் சன்யால் வனப்பகுதியில் மீண்டும் அந்த பயங்கரவாத குழுக்களுடன் சண்டை நடந்தது.

இதில் இரு பயங்கர வாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் நான்கு பேர் வீர மரணமடைந்தனர். மற்ற பயங்கரவாதிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.

அவர்களை தேடும் பணி கடந்த நான்கு நாட்களாக நடக்கிறது. அவர்களுக்கு ராஜ்பாக் பகுதியைச் சேர்ந்த சிலர், உணவு, குடிநீர் மற்றும் தேவையான உதவிகளை வழங்கியதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

அவர்களின் உதவி யால் வனப்பகுதிகளுக்கு பயங்கரவாதிகள் அடிக்கடி இடத்தை மாற்றுவதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தில் கேமராக்கள் பொருத்தியும், மோப்ப நாய் உதவியுடனும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது.

Advertisement