கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புகலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு
நாமக்கல்:சூரியம்பாளையம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, சூரியம்பாளையத்தில், 6,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், திருச்செங்கோடு நகராட்சி சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை மாற்று பாதையில் அமைக்க வலியுறுத்தி, சூரியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், 500க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் உமாவை சந்தித்து, திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் இருந்து, சூரியம்பாளையம் பகுதிக்கு கழிவுநீர் கொண்டுசெல்லப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்படுவதால், சூரியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி நீராதரங்கள் பாதிக்கப்படும். அதனால், ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த திட்டத்தை எங்கள் ஊர் பகுதியில் செயல்படுத்த வேண்டாம் என, ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம். எனவே, இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் நடைமுறைப்படுத்த வேண்டும் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உமா கூறியதாவது:இந்த திட்டத்தை தயார் செய்த அதிகாரிகள் சென்னையில் உள்ளனர். துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் சூரியம்பாளையம் பகுதிக்கு நேரில் வரவழைக்கப்பட்டு, இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆங்கில தேர்வு எழுதிய 38 ஆயிரத்து 414 பேர்
-
திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை ஏப். 7ல் துவக்கம்
-
போராட்டத்தை ஒத்திவைத்த பாரதியார் பல்கலை மாணவர்கள்
-
பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்
-
கட்டிக்குளம் கோயில் பங்குனி விழா துவக்கம்
-
விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு 'ஆப்சென்ட்' ஆனால் 'மெமோ'