குழந்தைகளே நன்கு படியுங்க, விளையாடுங்க: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

6

சென்னை: குழந்தைகளே நன்கு படித்து தைரியமாக விளையாடி நியாயமான வெற்றியை பெறுங்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையில், கண்காட்சி கால்பந்து போட்டி நடந்தது. இதில் ரொனால்டினோ தலைமையிலான பிரேசில் லெஜண்ட்ஸ் அணி, விஜயன் வழிநடத்திய 'இந்தியா ஆல் ஸ்டார்ஸ்' அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் பெருமை உடன் கர்ஜித்தது. பிரேசில் லெஜண்ட் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டி சென்னையில் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.



வரவிருக்கும் தலைமுறைகளுக்கான கனவுகளை ஊக்குவிக்க இந்த போட்டி நினைவில் கொள்ள வேண்டிய ஒரு தருணம். குழந்தைகளே நன்கு படித்து தைரியமாக விளையாடி நியாயமான வெற்றியை பெறுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement