அசுத்தமான கிணற்று நீரை குடிக்க முடியாமல் தவிப்பு

திருவாடானை:' திருவாடானை அருகே காட்டியனேந்தல் கண்மாய்க்கரை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிணறு அமைக்கப்பட்டது. நல்ல தண்ணீராக இருந்ததால் அப்பகுதி மக்கள் குடிக்க பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த கிணற்றில் பாசி படர்ந்து அசுத்தமாக இருப்பதால் குடிக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், கோடைகாலத்திலும் இந்த கிணறு வற்றாமல் இருப்பதால் பயனுள்ளதாக உள்ளது. கிணற்றின் மேற்பகுதி திறந்த வெளியாக உள்ளது. இதனால் காற்றில் பறக்கும் குப்பை காகிதங்கள், துாசிகள் கிணற்றுக்குள் விழுகிறது.

தற்போது பாசி படர்ந்துள்ளதால் குடிக்க பயன்படுத்த முடியவில்லை. கிணற்றுக்குள் குப்பை சேராத வகையில் மூடி, பாசியை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement