ரூ.15,000 ஊதியம் பெறும் துப்புரவு தொழிலாளி; ரூ.33 கோடி வரி நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்

4

அலிகார்: உ.பி.யில் துப்புரவு தொழிலாளிக்கு ரூ.33.88 கோடி வரி நோட்டீஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



இதுபற்றிய விவரம் வருமாறு: உ.பி. மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள நகரம் கெய்ர். இங்குள்ள வங்கி ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிபவர் கரண்குமார் வால்மீகி. வாலிபரான இவரின் மாத சம்பளம் ரூ.15,000.


ஆனால், இவருக்கு ரூ.33.88 கோடி வரி நோட்டீசை வருமான வரித்துறை அனுப்பி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சம்பளம் ரூ.15,000 ஆனால் வரியோ ரூ.33.88 கோடியா என கரண்குமார் வால்மீகியும் அவரது குடும்பமும் ஒட்டு மொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போயினர்.


குழப்பம், அதிர்ச்சியின் ஊடே கரண்குமார் வால்மீகி, விவரம் அறிய வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகி உள்ளார். போலீசில் புகார் அளிக்குமாறு அங்குள்ள அதிகாரிகள் கூற, அவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார்.


காவல்துறை அதிகாரிகள் அவரின் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார் கரண்குமார் வால்மீகி.


இதுகுறித்து அவர் கூறுகையில், கெய்ர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக உள்ளேன். எனது மாத ஊதியம் ரூ.15,000. கடந்த மார்ச் 29ம் தேதி வருமானவரித்துறையில் இருந்து எனக்கு ஒரு நோட்டீஸ் வந்தது.


அதில் நான் ரூ.33,88, 85க்கு பணவரித்ததனை செய்துள்ளதாகவும், அதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் எனக்கு இன்னமும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று கூறினார்.


கரண்குமார் வால்மீகியை போன்றே பழச்சாறு விற்பனையாளர், பட்டறை தொழிலாளி ஒருவருக்கும் இதேபோன்று வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement