வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்

புதுடில்லி: வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு அனைத்து கட்சிகள் மற்றும் எம்.பி.,க்கள் ஆதரவு தர வேண்டும் என்று இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வக்பு நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசு வக்பு திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டில்லியில் உள்ள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலானது மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. அரசியல் கட்சிகள், அனைத்து எம்.பி.க்கள் சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கத்தோலிக்க பிஷப் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது;
அரசியலமைப்பு சட்டத்தின்படி வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் சீரற்ற சில அம்சங்கள் இருக்கிறது என்பது யதார்த்தம். கேரளாவில் முனம்பாம் என்ற பகுதியில் உள்ள 600 குடும்பத்தினரின் மூதாதையர்களின் சொத்துகளை வக்புக்கு சொந்தமான நிலம் என்று கேரள வக்பு வாரியம் எடுத்துக் கொண்டது.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த விவகாரமானது சிக்கலான சட்ட பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வக்பு சட்டத்திருத்தமே இந்த பிரச்னைக்கு தீர்வைத் தரும். எனவே இந்த திருத்தத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு தர வேண்டும்.
பார்லி.யில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்களின் பிரதிநிதிகளும் ஆதரவை அளிக்க வேண்டும். முனம்பாம் பகுதி மக்களின் நிலங்கள் அவர்களுக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு சட்டங்களும் திருத்தப்பட வேண்டும். ஆனால், அதே நேரத்தில் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வக்பு சட்டத்திருத்தத்துக்கு, அஜ்மீர் தர்காவின் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.










மேலும்
-
19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
-
இ.வி., கார்களை சாராமல் மாற்று எரிபொருளில் கவனம்
-
நீலகிரி வரையாடுகளுக்கு நாடாப்புழு தொற்று கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை
-
அரசு கட்டட மின் கட்டணம்; 'ஆன்லைனில்' மட்டுமே வசூல்
-
புல் மெஷின்ஸ் 'இ.எக்ஸ்., பிளஸ் ' 'சூப்பர் ஸ்மார்ட்' பேக்ஹோ லோடர்
-
நொய்யல் நீரை ஆராயும் மாசு கட்டுப்பாடு வாரியம்