புல் மெஷின்ஸ் 'இ.எக்ஸ்., பிளஸ் ' 'சூப்பர் ஸ்மார்ட்' பேக்ஹோ லோடர்

கோவையை சேர்ந்த 'புல் மெஷின்ஸ்' நிறுவனம், அதன் 'சூப்பர் ஸ்மார்ட் இ.எக்ஸ்., பிளஸ்' பேக்ஹோ லோடரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இதில், எரிவாயு செலவு மற்றும் சுற்றுப்புற மாசுபாடை குறைக்கும் வகையில் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் வழங்கப்பட்டுள்ள 4,760 சி.சி., 4 சிலிண்டர் கிர்லோஸ்கர் டீசல் இன்ஜின், கட்டுமான இயந்திர 'பி.எஸ்., - 5' விதிமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது, 75 ஹெச்.பி., பவரையும், 300 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில், 'ஸ்மார்ட் ஹைட்ராலிக்ஸ்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், 1,800 கிலோ எடை வரை சுமக்க முடியும். மொத்த செயல்பாட்டு எடை, 8,010 கிலோவாகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 480 எம்.எம்.,மாகவும் உள்ளது.
கார்பன் கழிவுகளை அகற்றும் வகையில் நவீன எக்ஸாஸ்ட் அமைப்பு, எலக்ட்ரானிக்ஸ் கோளாறுகளை தடுக்க, 28 சதவீதம் அளவுக்கு சென்சார்கள் குறைப்பு ஆகியவை இயந்திர பராமரிப்பை எளிதாக்குகிறது.
எக்ஸ்கவேட்டர் பக்கெட் அளவு, 0.12 சி.எம்., முதல் 0.23 சி.எம்., லோடர் பக்கெட் அளவு, 1 சி.எம்., முதல் 1.5 சி.எம்., வரை வழங்கப்படுகிறது.
பயன்பாடு - குழி வெட்டுவது, பழைய கட்டடங்களை சிதைப்பது, பொருட்கள், பணி, குப்பையை அகற்றுவது மற்றும் ஏற்றுவது, மணல், கற்களை சமப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
இன்ஜின் 4,760 சி.சி., 4 சிலிண்டர், கிர்லோஸ்கர் இன்ஜின்
பவர் 75 ஹெச்.பி.,
டார்க் 300 என்.எம்.,
செயல்பாட்டு எடை 8,010 கிலோ
பேலோட் 1,800 கிலோ
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.68,480!
-
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது
-
மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
-
நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம்; 'அம்மா' உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு உணவு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
-
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி