நொய்யல் நீரை ஆராயும் மாசு கட்டுப்பாடு வாரியம்

திருப்பூர்; கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கலக்கும் சாக்கடை கழிவுநீரால், நொய்யலாறு மாசடைந்த நிலையிலேயே உள்ளது. பனியன் உற்பத்தி நகரான திருப்பூரில், மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல் இயங்கும் சில முறைகேடு சாய ஆலைகள், சுத்திகரிக்காத, சாயக்கழிவுநீரை நொய்யலாற்றில் திறந்துவிட்டு, மேலும் மாசுபடுத்துகின்றன.
இதனால் மாசுகட்டுப்பாடு வாரியம், 'ரியல் டைம் மானிட்டரிங்' தொழில்நுட்பத்தில், நொய்யலாற்று நீரின் தன்மையை முழு நேரமும் ஆய்வு செய்து, உடனுக்குடன் அளவீடுகளை வழங்கும் கருவியை ஆற்றில் பொருத்தியுள்ளது. மங்கலம், காசிபாளையம், ஒரத்துப்பாளையம் அணை ஆகிய மூன்று இடங்களில், கருவி பொருத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
நொய்யலாற்றின் கரையோர பகுதியில் உள்ள நிறுவனங்களில் கருவி வைக்கப்பட்டு, உறிஞ்சு குழாய் ஆற்றினுள் போடப்பட்டுள்ளது. இந்த கருவி, சீரான இடைவெளியில் ஆற்றுநீரை உறிஞ்சி, நீரின் தன்மையை ஆய்வு செய்துவிட்டு, நீரை மீண்டும் ஆற்றுக்குள் அனுப்பி வைத்து விடும்.தடையின்றி இயங்க சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. விவரங்களை மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகத்துக்கு அனுப்ப, இணைய தள இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
நொய்யலாற்றில் மூன்று இடங்களில் 'ரியல் டைம் மானிட்டரிங்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி, ஆற்று நீரை உறிஞ்சி, நீரின் டி.டி.எஸ்., அளவு, அமில, காரத்தன்மைகள் (பி.எச்.,), ஆக்சிஜன் அளவு, மின் கடத்தும் திறன், கலந்துள்ள உயிரியல் மாசு அளவு உட்பட, 8 வகையான தன்மையை, முழு நேரமும் அளவீடு செய்து, அறிக்கையை அனுப்பும். தொடர் கண்காணிப்பு வாயிலாக, நொய்யலாற்றில் எந்த இடத்தில் சாயக்கழிவுநீர் போன்ற நச்சுக்கள் கலக்கிறது என கண்டறிந்து துரித நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.68,480!
-
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது
-
மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
-
நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம்; 'அம்மா' உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு உணவு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
-
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி