மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டில்லி பயணம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!

15

சென்னை: டில்லி பயணம் குறித்த நிருபர்கள் கேள்விக்கு, "மவுனம் அனைத்தும் நன்மைக்கே" என்று ஒற்றை வரியில் செங்கோட்டையன் பதில் அளித்துவிட்டு சென்றார்.



அ.தி.மு.க., பொதுச்செயலர் இ. பி. எஸ்., உடன், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு, கருத்து வேறுபாடு நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அ.தி.மு.க., எம்எல்ஏ கூட்டங்களையும், செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார். இது அரசியல் வட்டாரங்களில் முரண்பாடு நிலவுவதாக பேச்சை சூடு பிடிக்க செய்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்காமல் தவிர்த்து வந்தார். நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில் கூறி இருந்தார்.


இதற்கிடையே, கடந்த வாரம் இ. பி. எஸ்., கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருடன் டில்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.அவர் தமிழகம் திரும்பிய நிலையில், கடந்த 28ம் தேதி, அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையன், தனியே டில்லி சென்றார். அங்கு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.


இந்நிலையில் இன்று (மார்ச் 31) டில்லி போனீங்களா? தொடர்ச்சியாக மவுனமாக இருக்க காரணம் என்ன? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மவுனம் அனைத்தும் நன்மைக்கே" என்று ஒற்றை வரியில் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Advertisement