பொது மாமல்லபுரம் அருகே இரவில் பெண் மாயம்

கொக்கிலமேடில், காணாமல் போன பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.

மாமல்லபுரம்,மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி சங்கீதா, 36.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதற்கு முன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது காணாமல் போய், வேறு ஊரில் மீட்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜன., 29ம் தேதி இரவு வீட்டில் உறங்கியவர், நள்ளிரவில் வெளியேறி காணாமல் போனார்.

அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சுரேஷ், இதுகுறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் வாயிலாக, அப்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement