கச்சத்தீவை மீட்க வேண்டும்; சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்

49


சென்னை: மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசியதாவது: தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு அடிக்கடி மறந்து விடுகிறது; மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்டுக் கொண்டு வர வேண்டும். இலங்கையில் புதிய அரசு அமைந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்கிறது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் போது மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், படகுகளையும் பிரதமர் மோடி மீட்டு தர வேண்டும். ஒரு நாளைக்கு 2 மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும்.



கச்சத்தீவை, மாநில அரசு தான் தாரை வார்த்தது என்று தவறான தகவல்கள் பரபரப்படுகிறது. அனைத்துக் கட்சி கூட்டம் அப்போதைய தமிழக அரசால் கூட்டப்பட்டது. பார்லிமென்டிலும் தி.மு.க., எதிர்ப்பை பதிவு செய்தது. ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என ஜெயலலிதாவும் தீர்மானம் நிறைவேற்றினார். ஓ.பி.எஸ்., முதல்வராக இருந்த போதும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். கச்சத்தீவு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் கருணாநிதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


பா.ஜ., ஆதரவு

தீர்மானத்துக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்தது. பா.ஜ., சார்பில் பேசிய வானதி சீனிவாசன், அனைத்து மீனவர்களையும் சமமாக கருதும் மத்திய பா.ஜ., அரசு, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதையும் எதிர்த்தது என்று குறிப்பிட்டார்.

நிறைவேற்றம்



அனைத்துக் கட்சிகளும் கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. பின்னர், முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement