ஆண்டுக்கு 3 முறை இனி சி.ஏ., தேர்வு
சென்னை : இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும், சி.ஏ., படிப்புக்கான தேர்வு, இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த துறைகளில் பணிபுரிய, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் நடத்தும், பட்டய கணக்காளர் என்ற, சி.ஏ., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வு மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. பிளஸ் 2 முடித்தோர், சி.ஏ., முதல்நிலை தேர்வை எழுதலாம். இதில், தேர்ச்சி பெற்றோர், பி.காம்., முடித்து இடைநிலை தேர்வு எழுதலாம். அதில், தேர்ச்சி பெறுவோர் இறுதி தேர்வை எழுதலாம்.
தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும், 50 சதவீதம் வரை மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெறுவர். இந்த மூன்று கட்ட தேர்வுகளையும் முடித்தோர், பட்டய கணக்காளராக பணியாற்றலாம். பட்டய கணக்காளர் நிறுவனம், இதுவரை ஆண்டுக்கு இரண்டு முறை, இந்த தேர்வுகளை நடத்தியது. இந்த நடைமுறை மாற்றப்படும் என, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின், 26வது கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், இனி மூன்று முறை, அதாவது, ஜன., மே மற்றும் செப்., மாதங்களில், சி.ஏ., தேர்வை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதனால், காத்திருப்பு காலம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்