மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!

புதுடில்லி: பா.ஜ.,வில் இணைந்து கேரளாவில் பா.ஜ., முதல்வர் வேட்பாளராக களம் இறங்கலாம் என சசிதரூர் எண்ணுகிறார் என்று பா.ஜ., எம்.எல்.ஏ., அக்னிமித்ரா பால் கூறி உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.,யான சசி தரூர் அண்மைக்காலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார். அவரின் பாராட்டுகளின் பின்னணி குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.,வில் இணையவே சசி தரூர் விரும்புகிறார். அதன் பின்னர் கேரளாவில் பா.ஜ., முதல்வர் வேட்பாளராக கட்சி அவரை அறிவிக்கும் என்று எண்ணுகிறார் என்று பா.ஜ., எம்.எல்.ஏ., அக்னிமித்ரா பால் கூறி உள்ளார். இவர் மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் தெற்கு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;
140 கோடி மக்களுக்காக பிரதமர் மோடி செய்த பணிகள் பாராட்டத்தக்கவை. கொஞ்சம் போல ஞானம் கொண்டவர்களும் இதை பாராட்டவே செய்வார்கள்.
ஆனால் காங். எம்.பி., சசி தரூர் ஏன் இப்போது திடீரென பிரதமரை புகழ்கிறார். அதன் பின்னணி காரணம் என்ன? அவர் பா.ஜ.,வுக்கு மாற விரும்புகிறார். எனவே அவரை கட்சி கேரளாவின் முதல்வராக்க விரும்புவதாக எண்ணுகிறோம்.
இவரை போன்றவர்கள் ஏதேனும் உள்நோக்கம் இல்லாமல் எதையும் பேச மாட்டார்கள். அவர்களின் சொந்த விருப்பங்கள், அதன் பேரில் கிடைக்கும் ஆதாயங்களை பற்றியே சிந்திப்பவர்கள். மக்களின் நலன் என்பது அவர்களுக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.




மேலும்
-
2ம் கட்ட மெட்ரோ திட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்யுங்க; ராமதாஸ் வலியுறுத்தல்
-
ஞானசேகரன் மீதான வழக்குகள்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
நீர்நிலையில் குப்பையை கொட்டியதால் வந்த வினை; பின்னணி பாடகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
-
உங்கள் நாடகத்துக்கு சட்டசபையை பயன்படுத்தாதீர்; முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள்
-
மருதமலை அடிவார தியான மண்டபத்தில் வெள்ளிவேல் திருட்டு; வெளியானது சி.சி.டி.வி., காட்சி
-
சமைக்காத கோழிக்கறி சாப்பிட கொடுத்த பெற்றோர்: 2 வயது குழந்தை உயிரிழப்பு