மருத்துவமனை ஊழியரை தாக்கிய மூன்று பேர் கைது

குமரன் நகர், ஜாபர்கான்பேட்டை, பாரதி பிளாக், கம்பர் தெருவை சேர்ந்தவர் ரவீந்தர், 35. இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

கடந்த 28ம் தேதி இரவு, மொபைல் போன் பேசியபடி வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது, அங்கு நிறுத்தியிருந்த அவரது பைக் மீது, ஒருவர் அமர்ந்திருந்தார்.

இதையடுத்து, சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டுள்ள பைக் மீது, ஏன் அமர்ந்துள்ளீர்கள் என, கேட்டார்.

இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், ரவீந்தரை தாக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக, அவரது இரு நண்பர்கள் சேர்ந்து, ரவீந்தரை தாக்கி மிரட்டி விட்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரையடுத்து, குமரன் நகர் போலீசார் விசாரித்தனர். அதன்படி, ரவீந்தரை தாக்கிய மேற்கு சைதாப்பேட்டை, சாமியார் தோட்டத்தை சேர்ந்த இளவரசன், 29, சந்தோஷ்குமார், 26, ரகுபதி, 29, ஆகிய மூவரை, நேற்று கைது செய்தனர்.

இதில், சந்தோஷ்குமார் மீது, ஏற்கனவே ஒரு கொலை மற்றும் பல குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

Advertisement