திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் முகப்பேர், அம்பத்துார் தோல்வி

சென்னை, ஏப். 1-

திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், பல்வேறு இடங்களில் நடக்கின்றன. அந்தவகையில், முகப்பேர் சி.சி., மற்றும் பைன் ஸ்டார் சி.ஏ., அணிகள் மோதின. முதலில் பேட் செய்த, முகப்பேர் அணி, 40.5 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து பேட் செய்த பைன் ஸ்டார் சி.ஏ., அணி, 37 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு, 189 ரன்கள் அடித்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில், அம்பத்துார் சி.சி., அணியும் சேஷாத்ரி அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த அம்பத்துார் சி.சி., அணி, சேஷாத்ரி அணி வீரர் ஸ்ரீவத்சவின் அபார பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. முடிவில் 26.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்ரீவத்சவ் 27 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஆறு விக்கெட் சாய்த்தார். எளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய சேஷாத்ரி அணி, 23 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

Advertisement