மெக்கானிக் கொலை வழக்கில் கள்ளக்காதலி, உறவினர் கைது

கும்மிடிப்பூண்டி,
ஆரணி அடுத்த, சின்னம்பேடு பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 30; மெக்கானிக். நேற்று முன்தினம் காலை, சின்னம்பேடு ஏரிக்கரையோரம், தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
ஆரணி போலீசார் விசாரணைக்கு பின், சங்கருடன் கள்ளத்தொடர்பில் இருந்த மஞ்சுளா, 30, அவரது உறவினர் தயாளன், 24, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.
இக்கொலை குறித்து போலீசார் கூறியதாவது:
சின்னம்பேடு பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 30. இவரது கணவர், 2013ல் பாம்பு கடித்து உயிரிழந்தார். பின், மஞ்சுளாவிற்கு சங்கருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசியுள்ளனர். இது தொடர்பாக மஞ்சுளாவின் உறவினரான தயாளன் கேட்டுள்ளார்.
அப்போது, சங்கருடன் கள்ளத்தொடர்பு இருப்பதை மறைத்த மஞ்சுளா, தன்னை உல்லாசமாக இருக்க அழைத்து, மொபைல்போனில் சங்கர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தயாளன், கடந்த 29ம் தேதி காலை, ஏரிக்கரைக்கு செல்லும்போது சங்கரை பின்தொடர்ந்துள்ளார். அங்கு இரும்பு ராடால் இருமுறை தலையில் அடித்ததில் சங்கர் இறந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்