காற்றாடி பறக்க விட்ட இரண்டு பேர் கைது

திருவொற்றியூர்
திருவொற்றியூர் போலீசார் நேற்று காலை, காலடிப்பேட்டை திரிபுரசுந்தரி நகர் பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மாடியில் காற்றாடி பறக்க விட்டுக்கொண்டிருந்த இருவர், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று, இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மானவ் ஜெயின், 20, ஷவன் ஜெயின், 19, என்பதும், இவர்கள் ஆன்லைன் வாயிலாக, ஆர்டர் செய்து காற்றாடி, நுால் உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து, 8 காற்றாடிகள், 10 மாஞ்சா நுால் கண்டுகள், 12 லொட்டாய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப்பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement