பொது - சட்டையில் தீப்பிடித்து காயமடைந்த முதியவர் பலி

திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 60; கை, கால் செயலிழந்த நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

கடந்த, 17ம் தேதி, கழிப்பறைக்கு சென்ற நிலையில், பீடி பற்ற வைக்கும்போது, தீக்குச்சி நெருப்பு, சட்டையில் பிடித்துள்ளது.

பின், தீ மளமளவென, ஆடை முழுதும் பிடித்ததால், அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்கவே, அக்கம் பக்கத்தினர் ஸ்ரீதரை மீட்டு, சிகிச்சைக்காக, கே.எம்.சி., அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement