டயர்கள் தனியே ஓடும் சம்பவம்: விரைவு பஸ்களில் அதிகரிப்பு

2


சென்னை : விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளர்களுக்கு, அதன் நிர்வாக இயக்குனர் மோகன் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:


விரைவு பஸ்களில், தற்போது டயர்கள் தனியாக கழன்று, பயண தடைகள் ஏற்படுவது அதிகரித்து வருகின்றன.


எனவே, மூன்று சக்கரங்களுக்கு, தலா ஒரு ஒப்பந்த பணியாளர், ஒரு சக்கரத்துக்கு ஒரு நிரந்தர பணியாளர் என்ற வகையில் ஒதுக்கீடு செய்து, டயர் பராமரிப்பு பணிகளை பார்க்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் பணியை சரியாக செய்கின்றனரா என்பதை, நிரந்தர பணியாளர் உறுதி செய்ய வேண்டும்.


இனி வரும் காலங்களில், டயர்கள் தனியாக கழன்று பயண தடைகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பஸ்சின் பராமரிப்பு பணிகளை செய்த, நிரந்தர பணியாளர், மேற்பார்வையாளர் மற்றும் கிளை மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement